X
close save
crop image
x
TM
Sun, Aug 25, 2019 | Last Updated 4:06 pm IST

Menu &Sections

Search

விரைவில் சீன பெருஞ்சுவருக்கு கீழே... விரைவு ரயில் நிலையம்...

விரைவில் சீன பெருஞ்சுவருக்கு கீழே... விரைவு ரயில் நிலையம்...
data-page-url= 'http://www.apherald.com'
பீஜிங்:
விரைவில்... விரைவில்... என்று ஒரு திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. என்ன திட்டம் தெரியுங்களா?


சீனப் பெருஞ்சுவருக்கு கீழே உலகின் மிகப் பெரிய மற்றும் ஆழமான அதி விரைவு ரயில் நிலையம் கட்டும் திட்டம்தான் அது. வரும் 2022ஆம் ஆண்டில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை சீனா நடத்த உள்ளது.


போட்டிகளை சிறப்பாக நடத்துவது குறித்து, முன் தயாரிப்பிற்காக எடுத்து வரும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


 பீஜிங்க்கு தென் மேற்காக 80 கிலோ மீட்டர் தொலைவில் அதிக மக்கள் வருகை புரியும் பகுதியான படாலிங்க் பகுதியில் அமைக்க உள்ளார்களாம். 


இது பூமிக்கடியில் 36ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில், கிட்டத்தட்ட ஐந்து கால்பந்து மைதானத்திற்கு சமமான பரப்பளவில் அமையவுள்ளது.


இதுதான், உலகின் அதிவேக மற்றும் ஆழமான ரயில் நிலையமாக உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



5/ 5 - (1 votes)
Add To Favourite
About the author

I am Chandra Sekar. I have done B.E in Electrical And Electronics.