X
close save
crop image
x
TM
Sun, Aug 25, 2019 | Last Updated 4:02 pm IST

Menu &Sections

Search

டியர் ஒபாமா... பாசத்தின் வீடியோ... வைரலாகுது... வைரலாகுது...

டியர் ஒபாமா... பாசத்தின் வீடியோ... வைரலாகுது... வைரலாகுது...
data-page-url= 'http://www.apherald.com'
நியூயார்க்:
பாருங்க... பாருங்க... பயாஸ்கோப் பாருங்க... பாசத்தோட இந்த வீடியோவை பாருங்க என்று ஒபாமா தன் பேஸ்புக்கில் பதிவேற்றிய வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது.


சிரியா உள்நாட்டு போரில் காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் ஓம்ரான் தக்னீஷ் தனக்கு என்ன நடந்தது என்று கூட அறிந்து கொள்ள முடியாமல் தலையில் இருந்து வழிந்த ரத்தத்தை துடைக்கும் வீடியோ ஞாபகம் வருகிறதா? அந்த சிறுவனுக்கு தான் ஒரு குடும்பத்தை வழங்க இருக்கிறேன் "டியர் ஒபாமா" என்று 6 வயது சிறுவன் எழுதி படிக்கும் அந்த கடிதம்தான் அது. 


நியூயார்க்கின் ஸ்கேர்ஸ்டேல் நகரத்தை சேர்ந்த 6 வயது சிறுவன் அலெக்ஸ். இவன் ஓம்ரான் தக்னீஷ்க்கு தான் ஒரு குடும்பத்தை அளிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளான்.


தன்னை கலங்க வைத்த அந்த கடிதம் குறித்து ஐ.நா. சபையில் ஒபாமா வாசித்து காட்டினார். அதுமட்டுமா? அலெக்ஸ் அந்த கடிதத்தை வாசிப்பது போன்ற வீடியோவையும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் ஒபாமா பதிவிட்டுள்ளார். 80 லட்சம் பேர் பார்க்க, 1,50,000 பேர் இந்த வீடியோவை தங்களது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்ய என்று அந்த வீடியோ வைரலாகி வருகிறது.



5/ 5 - (1 votes)
Add To Favourite
About the author

I am Chandra Sekar. I have done B.E in Electrical And Electronics.