X
close save
crop image
x
TM
Sun, Aug 25, 2019 | Last Updated 4:09 pm IST

Menu &Sections

Search

தீயில் சிக்கியவர்களை மீட்டவர்கள் தீயில் சிக்கி பலியான சோகம்...

தீயில் சிக்கியவர்களை மீட்டவர்கள் தீயில் சிக்கி பலியான சோகம்...
data-page-url= 'http://www.apherald.com'
மாஸ்கோ:
பலரை காப்பாற்றியவர்கள் தீயில் சிக்கி இறந்த வேதனையை சொல்ல முடியாமல் கதறி வருகின்றனர் ரஷ்ய மக்கள்.


அந்த சோகத்தின் செய்திதான் இது. ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் இருக்கு ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையின் கிடங்கு. 4 ஆயிரம் சதுரமீட்டர் அளவிலான இந்த கட்டிடத்தில் பற்றியது தீ. கிடுகிடுவென தீபரவியதால் தகவல் தீயணைப்பு துறைக்கு பறந்தது.
அவர்களும் விரைந்து வந்து கட்டிடத்தில் சிக்கி கொண்டு தவித்த நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர். 


பின்னர் கட்டிடத்தில் இருந்து தீயணைப்பு படைவீரர்கள் வெளியேறினர். அப்போது புகை மூட்டம், அனலில் 8 பேர் கட்டிடத்தின் உள்ளேயே சிக்கி பரிதாபமாக இறந்தனர். இவர்களை மீட்க முடியாத அளவிற்கு தீயின் வேகம் இருந்ததுள்ளது. பல மணிநேரம் போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டு உள்ளே சென்று பார்த்தபோது அந்த தீயணைப்பு வீரர்கள் 8 பேரும் கரிக்கட்டைகளாக கிடந்ததை கண்டு அவர்களின் சக வீரர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


5/ 5 - (1 votes)
Add To Favourite
About the author

I am Chandra Sekar. I have done B.E in Electrical And Electronics.