X
close save
crop image
x
TM
Mon, Jun 17, 2019 | Last Updated 11:18 am IST

Menu &Sections

Search

உடையும் உத்திரபிரதேச மகாகத்பந்தன் : இடைத் தேர்தலை தனியாக சந்திக்கிறார் மாயாவதி

உடையும் உத்திரபிரதேச மகாகத்பந்தன் : இடைத் தேர்தலை தனியாக சந்திக்கிறார் மாயாவதி
data-page-url= 'http://www.apherald.com'

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து உத்திரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இடையே ஏற்பட்ட மகாகத்பந்தன் கூட்டணி இனி வரும் தேர்தலில் தொடராது என மாயாவதி இன்று செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடையே பேசுகையில், " இங்கு என்ன நடந்துள்ளது என நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இனி வர உள்ள இடைத் தேர்தலில் நாங்கள் தனியாக களம் காண்பதே சிறந்தது எனும் முடிவுக்கு வந்துள்ளோம்" என்றார்.
மேலும் உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகளைப் பார்க்கையில் சமாஜ்வாதி கட்சியின் அடிப்படை ஓட்டுக்களான யாதவ சமுதாய ஓட்டுக்களையே அவர்கள் பெற முடியாத சூழல் தெளிவாக தெரிகிறது. சமாஜ்வாதி கட்சியின் வலுவான வேட்பாளர்களே தோற்றுப் போயுள்ளனர். டிம்பிள் யாதவ்'வும் தான் போட்டியிட்ட கன்னோஜ் தொகுதியில் தோல்வியடைந்துள்ளார்.
எனவே சமாஜ்வாதி தலைமையால் அவர்களின் சொந்த ஓட்டுக்களையே கவர முடியாத நிலையில் இருக்கும் போது அவர்களால் பகுஜன் சமாஜ் கட்சி என்ன பலன் பெற்று விட முடியும்.
எனினும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் இடையேயான உறவை முழுவதுமாக முறித்துக் கொள்வதில் எங்களுக்கு விருப்பமில்லை. அகிலேஷ் யாதவ் மற்றும் சமாஜ்வாதி கட்சியுடனான எங்கள் நல்லுறவு என்றும் தொடரும்.
அகிலேஷ் யாதவ் மற்றும் டிம்பிள் யாதவ் இருவரும் என்னிடம் மரியாதையைக் கடைபிடித்தனர். நானும் தேசத்தின் நலனிற்காக கடந்த கால கசப்புகளை மறந்து அவர்களுடன் மரியாதையுடன் பழகினேன். அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து காலத்திலும் எங்கள் உறவு தொடரும்.
உறவைத் தொடரும் அதே வேளையில் உத்திரப் பிரதேச தேர்தல் முடிவுகளையும் நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும். இந்தத் தேர்தல் முடிவுகளே எங்களை தனித்துப் போட்டியிடும் முடிவிற்கு தள்ளியது.
எனினும் இது நிரந்தரமான பிரிவு அல்ல. வரும் காலங்களில் சமாஜ்வாதி கட்சி தங்களின் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றால் மீண்டும் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். ஆனால் வெற்றி பெறவில்லையெனில் தனித்தே செயல்படுவோம். எனவே வர இருக்கும் இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனியாக போட்டியிடுகிறது.
இவ்வாறு மாயாவதி தனது பேட்டியில் கூறியுள்ளார்.
உத்திரப் பிரதேசத்தில் பாஜக'வை மண்ணைக் கவ்வ வைப்போம் எனக் கூறி பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் ராஷ்டிரிய லோக் தள் கட்சிகள் இணைந்து மகாகத்பந்தன் எனும் கூட்டணிநை உருவாக்கி தேர்தலை சந்தித்தது. இந்தத தேர்தல் முடிவில் சமாஜ்வாதி 5 இடங்களும், பகுஜன் சமாஜ் 10 இடங்களும் பெற்றனர். மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 64 இடங்களை பாரதீய ஜனதா கட்சி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
5/ 5 - (1 votes)
Add To Favourite
About the author

Bharath has been the knowledge focal point for the world, As Darvin evolution formula End is the Start ... Bharath again will be the Knowledge Focal Point to the whole world. Want to hold the lamp and shine light on the path of greatness for our country Bharath.