X
close save
crop image
x
TM
Mon, Jun 17, 2019 | Last Updated 11:18 am IST

Menu &Sections

Search

என் மகன் வைபவ்'ன் தோல்விக்கு சச்சின் பைலட்டே பொறுப்பேற்க வேண்டும் : ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

என் மகன் வைபவ்'ன் தோல்விக்கு சச்சின் பைலட்டே பொறுப்பேற்க வேண்டும் : ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
data-page-url= 'http://www.apherald.com'
சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த ஆறு மாதங்களில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜஸ்தான் மாநில முதல்வருமான அசோக் கெலாட் தன்னுடைய மகன் வைபவ் கெலாட்டின் தோல்விக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சச்சின் பைலட் தான் காரணம் என கூறியுள்ளது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஏபிபி செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஜோத்பூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தன்னுடைய மகன் வைபவ் கெலாட்டின் தோல்விக்கு மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்.
சச்சின் பைலட் தன்னிடம் நிச்சயம் ஜோத்பூரில் வெற்றி பெறுவோம். நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என உறுதியாகக் கூறினார். தேர்தல் பரப்புரையும் சிறப்பாக இருந்ததாக அவர் கூறினார். எனவே தேர்தலில் தோற்றதால் அதற்கு சச்சின் பைலட்டே பொறுப்பேற்க வேண்டும் என தான் எண்ணுவதாக கூறியுள்ளார்.
மேலும் யாரேனும் இதற்காக மாநில முதல்வரோ இல்லை பிரதேச காங்கிரஸ் தலைவரோ பொறுப்பேற்க வேண்டும் என கூறினால் அது தவறு. என்னைப் பொறுத்தவரை இந்தத தோல்விக்கு அனைவரும் கூட்டாகவே பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த இராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த காங்கிரஸ் கட்சி தற்போது மாநிலத்தில் உள்ள அனைத்து 25 தொகுதிகளிலும் தோல்வியடைந்ததை அடுத்து அசோக் கெலாட் இவ்வாறு கூறியிருப்பது சச்சின் பைலட் ஆதரவாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் மூலம் மாநிலத்தில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே நடக்கும் பனிப்போரை காங்கிரஸ் கட்சி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
அசோக் கெலாட் ராஜஸ்தான் முழுவதும் பிரச்சாரம் செய்யாமல் தன் மகன் போட்டியிட்ட ஜோத்பூரில் மட்டுமே கவனம் செலுத்தியைக் குறிப்பிட்டு ராகுல் காந்தி கடந்த வாரம் குறை கூறியதை அடுத்து அசோக் கெலாட்டிடமிருந்து இந்த கருத்து வந்திருப்பது குறிப்பிடத் தக்கது.
தேர்தல் தோல்வியை அடுத்து ராஜஸ்தான் காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான உதய் லால் அஞ்சனாவும் வைபவ்'ன் தேர்வை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர்.
ஜோத்பூரில் வைபவ் பாஜக'வின் மத்திய அமைச்சரான கஜேந்திர சிங் செகாவத்தை எதிர்த்துப் போட்டியிட்டு 5 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


5/ 5 - (1 votes)
Add To Favourite
About the author

Bharath has been the knowledge focal point for the world, As Darvin evolution formula End is the Start ... Bharath again will be the Knowledge Focal Point to the whole world. Want to hold the lamp and shine light on the path of greatness for our country Bharath.