X
close save
crop image
x
TM
Thu, Jun 27, 2019 | Last Updated 2:56 pm IST

Menu &Sections

Search

இந்தி எங்கள் இரத்தத்திலேயே கிடையாது : திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி பேட்டி

இந்தி எங்கள் இரத்தத்திலேயே கிடையாது : திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி பேட்டி
data-page-url= 'http://www.apherald.com'
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சில தினங்களுக்கு முன்பு புதிய கல்விக் கொள்கை ஒன்றை பொதுமக்களின் கருத்தைக் கேட்பதற்காக வெளியிட்டிருந்தது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்ததை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், "இந்தி எங்கள் இரத்தத்திலேயே கிடையாது" என்றார்.
"Hindi is not in our Blood" said by DMK President MK Stalin
இஸ்ரோவின் முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கனின் தலைமையிலான குழு இந்தியாவின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மே மாதம் 31'ம் தேதி சமர்ப்பித்தது. இந்த வரைவு அறிக்கையில் பால்வாடி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்க வலியுறுத்தி பரிந்துரை செய்திருந்தது. மேலும் மும்மொழிக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தவும் பரிந்துரை செய்தது.
மொத்தம் 484 பக்கம் உள்ள இந்த அறிக்கையில் இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் இந்தியையும் பயிற்றுவிக்கலாம் எனவும், இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வேறு ஒரு இந்திய மொழியையும் கற்பிக்கலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளது.
வர இருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை கிளப்புவர் என்றும் தமிழர்களின் இரத்தத்தில் இந்திக்கு என்றுமே இடமில்லை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேட்டியில் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இந்தியைத் திணிப்பது என்பது தேன் கூட்டில் கல்லெறிவது போன்றதாகும் எனவும் கூறினார்.
இந்நிலையில் இந்தித் திணிப்பு என பரவும் செய்தியை அடுத்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்த ஒரு மொழியையும் திணிக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது. இந்திய அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கும் முயற்சியிலேயே உள்ளது. நிபுணர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரைவு அறிக்கை பொதுமக்களின் கருத்தறிய வெளியிடப்பட்டுள்ளது.  மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்த பிறகு அரசு இது தொடர்பாக முடிவெடுக்கும்" எனக் கூறினார்.


5/ 5 - (1 votes)
Add To Favourite
About the author

Bharath has been the knowledge focal point for the world, As Darvin evolution formula End is the Start ... Bharath again will be the Knowledge Focal Point to the whole world. Want to hold the lamp and shine light on the path of greatness for our country Bharath.