X
close save
crop image
x
TM
Thu, Jun 27, 2019 | Last Updated 2:55 pm IST

Menu &Sections

Search

மோடி 2.0 : முக்கிய இலாக்காக்களும் அமைச்சர்களும்

மோடி 2.0 : முக்கிய இலாக்காக்களும் அமைச்சர்களும்
data-page-url= 'http://www.apherald.com'
நரேந்திர மோடியின் தலைமையில் புதிய அமைச்சரவை நேற்று வியாழக்கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டது. எனினும் அமைச்சர்களின் இலாகாக்கள் குறித்த அறிவிப்பு பின்னரே வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் மோடியின் வெற்றிக்கு சாரதியாக பாஜக'வின் தலைமைப் பொறுப்பிலிருந்து பணியாற்றிய அமித் சா இந்த முறை அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உள்துறை எனும் மிக முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை உள்துறை அமைச்சராக பணியாற்றிய ராஜ்நாத் சிங்கிற்கு இந்த முறை பாதுகாப்புத் துறை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த முறை வர்த்தகத் துறை அமைச்சராக இருந்து பின்னர் பாதுகாப்புத் துறை அமைச்சராக உயர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு இந்த முறை நிதித்துறை எனும் மிக முக்கிய துறை வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் தனிப்பட்ட முதல் பெண் அமைச்சராக பணியாற்றியதைப் போலவே, நிதித்துறையிலும் முதல் தனிப்பட்ட பெண் அமைச்சர் என்ற சிறப்பைப் பெறுகிறார்.
அரசியல் பார்வையாளர்கள் அனைவரும் உடல்நிலையை காரணம் காட்டி அருண் ஜெட்லி விலகியதால் அந்த பொறுப்புக்கு அமித் சா'வே நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்ததாக, வெளியுறவுத் துறையில் பலகாலம் சிறப்பாகப் பணியாற்றிய முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெய்சங்கர் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவைக்கு புதியவராக இருந்தாலும் சுஷ்மா சுவராஜ் வெளியேறியதை அடுத்து அந்த பதவிக்கு சரியான நபராக இருப்பார் என மோடியால் அமைச்சரவைக்குள் இணைக்கப்பட்டுள்ளார்.
நிதின் கட்காரி கடந்தமுறையைப் போலவே இந்த முறையும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவே நீடிக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைத் தோற்கடித்து அமேதி தொகுதியில் மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைத் தேடித்தந்த ஸ்மிருதி ராணிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது.
பிரகாஷ் ஜவ்டேகருக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகமும், ராம் விலாஸ் பஸ்வானுக்கு உணவு, பொது வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத் துறையும் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று குடியரசுத் தலைவர் மாளிகையில் மொத்தம் 57 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில் 25 புதிய அமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் மிக முக்கிய துறைகளாக கருதப்படும் உள்துறை, நிதித்துறை, பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை ஆகியவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவருக்கு இடமளித்திருப்பது நிச்சயம் தமிழர்களுக்கு பெருமைக்குரிய விசயம் தான்.


5/ 5 - (1 votes)
Add To Favourite
About the author

Bharath has been the knowledge focal point for the world, As Darvin evolution formula End is the Start ... Bharath again will be the Knowledge Focal Point to the whole world. Want to hold the lamp and shine light on the path of greatness for our country Bharath.