X
close save
crop image
x
TM
Mon, Jun 17, 2019 | Last Updated 11:14 am IST

Menu &Sections

Search

இனி ஒரு மாதம் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்க மாட்டோம் : காங்கிரஸ் அறிவிப்பு

இனி ஒரு மாதம் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கெடுக்க மாட்டோம் : காங்கிரஸ் அறிவிப்பு
data-page-url= 'http://www.apherald.com'
பாராளுமன்றத் தேர்தல் படுதோல்வியை ஒட்டி வாழ்வா, சாவா போராட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெற்று மூக்குடைபட விரும்பாததால் அடுத்த ஒரு மாதத்திற்கு காங்கிரஸ் சார்பாக யாரும் தொலைகாட்சி விவாதங்களில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசின் ஊடகப் பிரிவு பொறுப்பாளரான ரன்தீப் சிங் சுர்ஜீவாலா இது தொடர்பாக டிவிட்டரில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அடுத்த ஒரு மாத காலத்திற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஊடக விவாதங்களில் பங்கேற்க யாரையும் அனுப்ப மாட்டோம் என முடிவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊடக விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ்காரர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்க வேண்டாம் என ஊடகங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட மாபெரும் தோல்வியை அடுத்து காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது. தற்போது புதிய மக்களவையில் காங்கிரஸ் 52 உறுப்பினர்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அங்கீகாரத்தைக் கூட பெற முடியாத அவல நிலைக்கு உள்ளாகியுள்ளது. இது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய தாக்கத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதில் பிடிவாதமாக இருப்பதும் கட்சி வட்டாரங்களில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தற்காலிகமாக சமாதானமடைந்திருக்கும் ராகுல் காந்தி அடுத்த சில மாதங்களுக்கு தலைவராக செயல்படுவதாகவும் அதற்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத கட்சியின் முக்கிய உறுப்பினர் கூறியுள்ளார்.
இதற்கிடையே ராகுல் காந்தி தொடர்ந்து பதவியில் நீடிக்கவும் ராஜினாமாவை திரும்பப் பெறவும் வலியுறுத்தி தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பொல்லு கிஷன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று அறிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபைக் காங்கிரஸ் குழுவும் ராஜினாமாவை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித்தும் இது தொடர்பாக ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து ராஜினாமாவை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில் நாளை அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை காங்கிரஸ் கட்சியானது பாராளுமன்ற வளாகத்தில் கூட்டியுள்ளது. தோல்வி குறித்த காரணங்களை ஆராயவும், ஜீன் 6'ம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய மக்களவையின் முதல் கூட்டத்தில் எப்படி செயல்பட வேண்டும் என விவாதிக்க இந்த கூட்டத்தை காங்கிரஸ் கட்சி கூட்டியுள்ளது.


5/ 5 - (1 votes)
Add To Favourite
About the author

Bharath has been the knowledge focal point for the world, As Darvin evolution formula End is the Start ... Bharath again will be the Knowledge Focal Point to the whole world. Want to hold the lamp and shine light on the path of greatness for our country Bharath.