X
close save
crop image
x
TM
Mon, Jun 17, 2019 | Last Updated 11:11 am IST

Menu &Sections

Search

டெல்லியின் ஏழு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கும் பாஜக

டெல்லியின் ஏழு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கும் பாஜக
data-page-url= 'http://www.apherald.com'
டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது. ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் இரண்டு தொகுதிகளில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகிக்கிறது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் பகீரத பிரயத்தனம் செய்து கூட்டணி இறுதியாகவில்லை. இது பாஜகவுக்கே சாதகமாக முடியும் என்று அப்போதே கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
தற்போது மும்முனைப் போட்டியில் டெல்லியின் அனைத்து தொகுதிகளையும் பாஜக வாரிச் சுருட்டுகிறது.
முதன்முறையாக தேர்தல் அரசியலில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் மற்றும் மனோஜ் திவாரி ஆகியோர் தொடக்கத்திலிருந்தே முண்ணனியில் உள்ளனர்.
காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷீலா தீட்சித் மனோஜ் திவாரியிடம் 29797 வாக்குகள் பின்தங்கியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.பி.அகர்வால் 8764 வாக்குகள் அளவில் ஹர்சவர்தனிடம் சாந்தினி சௌக் தொகுதியில் பின்தங்கி உள்ளார்.
பாஜக'வின் தற்போதைய பாரளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா மேற்கு டெல்லியில் காங்கிரசின் மகாபால் மிஸ்ராவை விட 37387வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் காங்கிரசின் அர்விந்தர் சிங்கை விட 18632 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
தெற்கு டெல்லியில் பாஜகவின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி ஆம் ஆத்மியின் ராகவ் சந்தாவை விட 30755 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
புதுடெல்லியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் மீனாக்‌ஷி லேகி காங்கிரசின் அஜய் மக்கானை விட 10486 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
தென் மேற்கு டெல்லியில் பாஜக'வின் ஹன்ஸ் ராஜ் ஆம் ஆத்மியின் ககன் சிங்கை விட 46379 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
வடகிழக்கு டெல்லியின் ஆம் ஆத்மி வேட்பாளர் திலீப் பாண்டே செய்தியாளர்களிடம், "ஆரம்பகட்ட வாக்குகளை வைத்து முடிவுக்கு வர வேண்டாம். முழுமையாக வாக்குகள் எண்ணப்படும் வரை காத்திருங்கள்" என்று கூறியுள்ளார்.
கடந்த 2014'ஐப் போலவே இந்த முறையும் டெல்லியை பாஜக முழுவதுமாக கைப்பற்றும் என்ற நிலையே தற்போது நிலவுகிறது.
BJP Leading in Delhi all 7 seats
ReplyForward


5/ 5 - (1 votes)
Add To Favourite
About the author

Bharath has been the knowledge focal point for the world, As Darvin evolution formula End is the Start ... Bharath again will be the Knowledge Focal Point to the whole world. Want to hold the lamp and shine light on the path of greatness for our country Bharath.