X
close save
crop image
x
TM
Thu, Jun 27, 2019 | Last Updated 2:56 pm IST

Menu &Sections

Search

குமாரசாமியின் டெல்லி பயண ரத்தைத் தொடர்ந்து பெங்களூரு விரையும் சந்திரபாபு நாயுடு

குமாரசாமியின் டெல்லி பயண ரத்தைத் தொடர்ந்து பெங்களூரு விரையும் சந்திரபாபு நாயுடு
data-page-url= 'http://www.apherald.com'
இந்தியாவில் மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று நாளை முடிவு வெளிவர உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக'வே அசுர பலம் பெற்று ஆட்சியைப் படிக்கும் என அனைத்து கருத்துக் கணிப்புகளும் சொல்கின்றன.
எனினும் பாஜக அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கி, ஒரு வேளை தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலம் பெறாத பட்சத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு, சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர்.


கடந்த வெள்ளியன்று டெல்லி சென்ற சந்திரபாபு நாயுடு இராகுல் காந்தி, சோனியா காந்தி, சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார். இதையடுத்து உத்தரப்பிரதேசம் சென்று அங்கு அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதியுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமியை டெல்லி வர அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கிடையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பாஜக'வுக்கு சாதகமாக வந்ததால் மாயாவதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மே 23'க்கு பிறகு முடிவு செய்து கொள்ளலாம் எனும் மன நிலைக்கு வந்து விட்டனர். இதே போல சிந்தனையில் உள்ள குமாரசாமியும் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்து விட்டார்.
இதனால் பெங்களூருவுக்கே வந்து கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவகௌடாவை சந்திப்பதற்காக சந்திரபாபு நாயடு இன்று பெங்களூரு விரைகிறார்.



5/ 5 - (1 votes)
Add To Favourite
About the author

Bharath has been the knowledge focal point for the world, As Darvin evolution formula End is the Start ... Bharath again will be the Knowledge Focal Point to the whole world. Want to hold the lamp and shine light on the path of greatness for our country Bharath.